"உறக்கத்தில் வருவது கனவு அல்ல. உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு"
- மக்கள் தலைவர் அப்துல் கலாம்
மண்ணின் மீதும் மக்களின் மீதும் ஈடுபாடு கொண்ட பலர் ஆளுக்கு ஒரு பக்கமாக பயணித்து
வந்தோம். 2018ல் கஜா புயல் என்னும் பேரிடர் எங்களை ஒன்றிணைத்து ஒருமுகப்படுத்தியது.
2019ல் வெற்றிப்பாதை என்ற பள்ளி மாணவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
கலந்தாய்வு மூலம் களம் கண்டோம். அதன் தொடர்ச்சியாக ஆம்பலாப்பட்டு கிராம மக்களின்
ஆதரவுடனும் இயற்கையை நேசிக்கும் பலரின் உதவியுடனும் 14.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட
குறிச்சி ஏரி புனரமைப்பு பணியில் பங்கேற்றோம்.
பன்முகம் கொண்ட சீதனம் தன்னார்வ குழுவில் கல்லூரி மாணவர்கள் , இயற்கை விவசாயிகள்,
பொறியாளர்கள், தொழில் முனைவர்கள், ஓட்டுனர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற அரசு
அதிகாரிகள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் என்று வாழ்க்கையின்
பல்வேறு துறைகளில் உள்ளோர் இணைந்து பயணிக்கின்றோம். நாங்கள் அனைவரும் பெரிய
கனவுக்கு சொந்தக்காரர்கள் என்பது மட்டுமே எங்கள் தகுதி.