பசுமை

தாய்மடி

தாய்மடி

சீதனத்தின் பசுமை திட்டம் “தாய் மடி” – அன்னையின் மடியில் எங்ஙனம் மகிழ்ச்சியாக வளர்ந்தோமோ அங்ஙனம், பூமித்தாயின் மடியில் மகிழ்ச்சியாக வாழ அவளுக்கு பசுமை ஆடை அணிவிக்கும் திட்டமே இது.

பிரச்சனை: "பசுமை சருகானது"

பெருகும் மக்கள் தொகை, அவர்களுக்கான இருப்பிடம், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் வனங்கள் மட்டுமல்ல விளைநிலங்களும் பரப்பளவில் குன்றி மரங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

மேற்குரியவை மட்டுமின்றி, மாறிய வேளாண்முறை, குறைந்த நிலத்தடி நீர்மட்டம், இயற்கை சீற்றம் (கஜா புயல்) என பல காரணிகளும் பசுமை மறைய காரணமாயின.

தீர்வு: "பசுமையை மீட்ப்போம்"

"நீரை நிலத்தில் தேடாதே வானத்தில் இருந்து கொண்டுவா" இவ்வாக்கியத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மழைக்கும் மரங்களுக்கும் இடையே உள்ள உறவை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆம்பலாப்பட்டை ஒரு பசுமை கிராமமாக மாற்றுவதன் மூலம் கார்மேகங்களை உருவாக்கி, மழை நீரை ஈர்த்து, நிலத்தடி நீர் மட்டத்தை கணிசமாக உயர்த்த முடியும் என திண்ணமாக நம்புகிறது சீதனம்.

இதுவரை என்ன செய்துள்ளோம்: "முதல் அடி"

இயற்கையோடு இணைவோம் எனத்தொடங்கிய எங்கள் பயணத்தில் 2019-ல் குறிச்சி ஏரியை புனரமைத்து அதன் மத்தியில் ”மியவாக்கி” முறையில் மூன்று திட்டுக்கள் அமைத்து அவைகளில் சுமார் 600 மரங்களும் ஏரியை சுற்றி சுமார் 1100 மரங்களும் நட்டு வளர்க்க ஏற்பாடு செய்துள்ளோம். ”தாய் மடி” என்ற மரம் வளர்க்கும் மையம் ஒன்று அமைத்துள்ளோம்.

அடுத்து என்ன செய்யவுள்ளோம்: "கனவுப்பாதை"

  • ”தாய்மடி” திட்டத்தின் மூலம் வரும் பசுமை பரப்பளவை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் மழை மேகங்களை ஈர்க்கும் விதமாக வரும் ஐந்து ஆண்டுகளில், ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பயன் தரும் மரக்கன்றுகள் சுமார் ஒரு லட்சம் நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.
  • இத்திட்டம், கிராம மக்களுடன் இணைந்து அவர்களுக்கு சொந்தமான இல்லம், தோட்டம், விவசாய நிலம் போன்ற இடங்களிலும் கிராம ஆட்சிமை குழுவுடன் இணைந்து நீர்தேக்கம், நீர்வழிப்பாதை மற்றும் பொது இடங்களிலும் மரம் வளர்த்து பாதுக்காப்பது என திட்டமிட்டுள்ளோம்.
  • இந்த கனவுப் பயணத்தில் மக்களை முக்கிய பங்குதாரரக முன்னிறுத்தும் விதமாக நடப்படும் ஒவ்வோரு மரக்கன்றும் தன்னிசையாக வளரும் வரை (குறைந்தது ஓர் ஆண்டிற்கு) அதை பாதுகாக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
  • கனவுப்பயணத்தின் முக்கிய நோக்கமான பசுமை, மழை நீர் மேகங்களை ஈர்ப்பது, மக்களுக்கு இயற்கை மீது பற்றை அதிகப்படுத்துதல், மாணவர்களை இயற்கை பேணுபவர்களாகவும், பாதுகாவலரகாவும் உருவாக்குவது என அதற்குரிய திட்டங்களை வகுத்து செயல்படுத்துவோம்.
பசுமை எழில் சூழ் ஆம்பலாப்பட்டு எங்கள் இலக்கு!
Gift to New Born Baby
Gift to New Born Baby
100%