வாழும் கலை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
- குறள், 942
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை என்பது வள்ளுவர் வாக்கு.
நல்ல சமச்சீர் உணவு, சுகாதாரம் ஆகியவற்றின் மூலம் நல் உடல் ஆரோக்கியம், அமைதியான உள்ளம் என சிறப்பான வாழ்க்கை மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்தி வருமுன் காக்கும் வாழ்வை வாழ வழிசெய்வதே சீதனத்தின் நோக்கமாகும்.
பிரச்னை: "நோய் கிருமி"
மக்கள் நோய்வாய்ப்படுவதற்கு முக்கிய காரணிகள் செயற்கை உர விவசாய முறை, மாறிய உணவுப் பழக்கம், மாசடைந்த சுற்றுச்சூழல். மேலும், குறைவான தொலைதூர சுகாதார நிலையத்தினால், நோய்த்தொற்று மற்றும் மரணம் அதிக எண்ணிக்கையில் ஏற்படுகிறது.
தீர்வு: "மருந்து"
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை வேளாண்மை மூலம் விளைந்த காய், பழ, பருப்பு வகைகள், அதிக சத்துள்ள சமச்சீர் உணவு என உணவு பழக்கத்தில் மாற்றத்தையும், உடற்பயிற்சி, விளையாட்டு, யோகாசனம், தியானம் என வாழ்கை முறையிலும் மாற்றத்தை செய்து நோய் வராமல் தடுக்கலாம்.
இதுவரை என்ன செய்துள்ளோம்: "ஆரோக்கியம்"
ஆம்பலாப்பட்டு கிராமத்தினர் ஆரோக்கியமான உடல் மற்றும் உள்ளத்துடன் வாழ வழிசெய்யும் இப்பயணம் கூடிய விரைவில் துவங்க இருக்கிறது. 2020 - 2021 ஆண்டிற்கான திட்ட வரைவை செப்டம்பர் 2020ல் வெளியிடவுள்ளோம்.
அடுத்து என்ன செய்யவுள்ளோம்: "நல் வாழ்வை நோக்கி"
<- கிராமத்தில் உள்ள அணைத்து குடும்பங்களுக்கும் தனி கழிப்பறை வசதிகள் அமைத்துக்கொடுப்பது
- வருடம் ஒரு முறையாவது இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்வது
- மக்களுக்கு இயற்கை வேளாண் உணவுப்பொருட்களின் தன்மையினாலும் சத்துள்ள சமச்சீர் உணவை உட்கொள்ளவதினாலும் ஏற்படும் நன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது
- இளைஞர்களை உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா, தியானம், தன்னார்வ தொண்டு மூலம் உடல் மற்றும் உள்ளதை செம்மை படுத்த வழிவகை செய்யவது.
- ஆம்பலாப்பட்டு மக்கள் அன்பு நேயத்துடனும், ஆரோக்கியமான மனதுடனும், வலிமையான உடலுடனும் வாழ வழி செய்வதே சீதனத்தின் இலக்கு