கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

வெற்றிப்பாதை

வெற்றிப்பாதை

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
- குறள், 400

கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல என்பது வள்ளுவர் வாக்கு.

மாணவர்களுக்கு தரமான கல்வியும், கலை விளையாட்டு துறைகளில் சிறப்பு பயிற்ச்சியும், சமுதாய அக்கறையும், தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் திறனும் உருவாக்குவதே சீதனத்தின் குறிக்கோள்.

பிரச்னை : "கல்லாமை"

சமீபகாலமாக தனியார் பள்ளிகளின் அசுர வளர்ச்சி ஒரு புறம், சரியான கட்டமைப்புமற்ற அரசு பள்ளிகள் மறுபுறம், கடைநிலை பொருளாதாரம் உள்ள மக்கள் என கிராம்புற மாணவர்களின் கல்வி பல நேரங்களில் அடிப்படை கல்விக்கூட தடைப்பட்டுபோகின்றது.

தீர்வு: "அரிச்சுவடி"

ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள எட்டு அரசு பள்ளிகளையும் சிறந்த கல்வி கூடங்களாக மாற்றவேண்டும். இப்பள்ளிகளில் படிப்பை தவிர்த்து, விளையாட்டு மற்றும் கலைகளையும் வளர்க்கும் கூடங்களாக திகழ வேண்டும்.

இதுவரை என்ன செய்துள்ளோம்: "முதலாம் வகுப்பு"

“வெற்றிப் பாதை” என்னும் தலைப்பில் 2019-ல், மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த கலந்தாய்வு 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்காக நடத்தப்பட்டது. 6 நெறியாளர்கள், 23 வல்லுனர்கள் மற்றும் 500க்கும் மேலான மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் உயர்கல்வி குறித்த தரமான ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை தொடர்ந்து ”கட்செவி”யின் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு “வெற்றிப் பாதை” பகுதியை "திட்டங்கள்" தலைப்பின் கீழ் காணலாம்

அடுத்து என்ன செய்யவுள்ளோம்: அறிவொளி

சீதனம் மூலம் ஆம்பலாப்பட்டில் உள்ள 8 அரசு பள்ளிகளையும் சிறந்த கல்வி மற்றும் கலை கற்கும் கூடமாக மேம்படுத்த திட்டமிட்டுளோம். அத்திட்டத்தின் பகுதியாக அனைத்து பிள்ளைகளுக்கும் தடையற்ற அடிப்படை கல்வி வழங்க முன்னுரிமை கொடுக்கவுள்ளோம். விளையாட்டு, கலை, நுண்கலை, தொழிற்கல்வி என மாணவர்களுக்கு விருப்பமான துறைகளில் சிறப்புற வாய்ப்பு ஏற்படுத்த எண்ணியுள்ளோம். மேலும், உயர்கல்விக்கான போட்டித்தேர்வளுக்கு சிறப்பு பயிற்சி அமைத்து கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

பாரம்பரிய தற்காப்பு கலைகள், நாட்டுப்புற இசை, நடனம் மொழியாளுமை, இயற்கை ஆர்வம் என கல்வித்தவிர பிற துறைகளிலும் சிறப்புற மிளிர திட்டங்கள் வகுத்துள்ளோம். ஆம்பலாப்பட்டு மாணவர்கள் பட்டறிவுடன், பல்துறை கற்றவர்களாகவும், இயற்கை பாதுகாவலராகவும், தன்னம்பிக்கை இளைஞர்களாகவும் உருவாக்குவதே சீதனத்தின் இலக்கு.