இயற்கை விவசாயம்

விதைக்களம்

விதைக்களம்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
- குறள், 1031

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது என்பது வள்ளுவர் வாக்கு.

ஆம்பலாப்பட்டு கிராமத்தில் 100% இயற்கை வேளாண்மை, மற்றும் விவசாய்த்தின் துணை, இணை செயல்களை மீட்டெடுக்கவும், விவசாயிகளை வளர்ச்சி பாதையில் செல்வதற்கு வழிநடத்தி பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வழிகோல்வதே சீதனத்தின் குறிக்கோள்.

பிரச்னை: "வாடிய பயிர்"

அதிக அளவில் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொள்ளி பயன்பாடு, நீர் பற்றாக்குறை, விவசாயத்தை தொழிலாக செய்வது என்பவற்றால் நிலம் தரிசாகி விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தீர்வு: "விதை நெல்"

மண்ணை வளமாக்க, நஞ்சில்லா உணவை விளைவிக்க, விவசாயத்தை லாபகரமாக மாற்ற இயற்கை விவசாயமே ஒரே வழி.

இதுவரை என்ன செய்துள்ளோம்: "துளிர்"

ஆம்பலாப்பட்டை ஓர் இயற்கை வேளாண்மை கிராமமாக மாற்றும் பயணம் கூடிய விரைவில் துவங்க இருக்கிறது. 2020 - 2021 ஆண்டிற்கான திட்ட வரைவை செப்டம்பர் 2020ல் வெளியிடவுள்ளோம்.

அடுத்து என்ன செய்யவுள்ளோம்: "வளரும் பயிர்"

ஆம்பலாப்பட்டை ஓர் இயற்கை வேளாண்மை கிராமமாக மாற்றவும், விவசாயிகளை கால்நடை வளர்க்க ஊக்குவிக்கவும், மிகுதியான வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைமயமாக்க பயிற்சியளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். விவசாயிகள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற கூட்டுறவு பண்ணை முறை மற்றும் கூட்டுறவு அங்காடி நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

ஆம்பலாப்பட்டு விவசாயப்பெருமக்களை இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் தன்னிரைவு பெற்றவர்களாக அடையச்செய்வதே சீதனத்தின் இலக்கு.