ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் மற்றும் சான் அன்டோனியோ தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் தாய்மடி என்ற மரக்கன்றுகள் வளர்க்கும் மையம் பிப்ரவரி 2020ல் ஆம்பலாப்பட்டு கீழக்கோட்டையில் தொடங்கப்பட்டது. இதுவரை, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் 1 லட்சம் ரூபாய் கொடுத்து இத்திட்டத்திற்கு உதவியுள்ளனர்.
இம்மையத்தில் நான்கு தாய்மடிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இம்மடிகளுக்கு ரசியா, செகசோதி, திராவிட மணி, மற்றும் கலைமணி என்று இக்கிராமத்தில் பிறந்த அல்லது திருமணத்தின் மூலம் இணைந்த பெண்களின் பெயரில் அமைக்கப்பட்டிருக்கின்றன.